பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக புது புது கண்டிஷன் போடும் மணிரத்தினம்..! இது உங்களுக்கே நியாயமா..?

ponniyin-selvan
ponniyin-selvan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருவோர் தான் இயக்குனர் மணிரத்தினம் இவர் தன்னுடைய கனவு திரைப்படத்தை இயக்க வேண்டும் என காத்திருந்த நிலையில் தற்போது அந்த கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கிவிட்டார் அந்த வகையில் இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

மேலும் இந்த திரைப்படமானது சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாக்கி உள்ள நிலையில் இதை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் முன்பதிவுட்டு டிக்கெட் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் விறுவிறுப்பாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு பிரமாண்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திருவிழா போல் கொண்டாடி வரும் நிலையில் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் சில அதிரடியான கண்டிஷங்களை போட்டு வருகிறார். அந்த வகையில் தன்னுடைய திரைப்படத்தின் டிக்கெட் விலையை எக்காரணத்தை கொண்டும் அதிகரிக்க கூடாது என அக்ரிமெண்ட் போட்டுள்ளாராம்.

பொதுவாக தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் என்றாலே ஸ்பெஷல் ஷோ என டிக்கெட் விலையை எக்கச்சக்கமாக உயர்த்தி விடும் நிலை உண்டு அந்த வகையில் எக்காரணத்தை கொண்டும் டிக்கெட்டின் விலையை ஏற்றக்கூடாது என்பதில் மணிரத்தினம் கட்டுப்பாட்டுடன் இருக்கிறாராம்.

அந்த வகையில் காலை 4:30 மணி அளவில் தொடங்கும் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை 190 ரூபாய் தான் வசூலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் இதனால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டும் இல்லாமல் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது மேலும் இந்த திரைப்படம் மட்டும் இல்லாமல் அனைத்து திரைப்படத்திற்கும் இதுபோன்று கட்டுப்பாடு இருந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த விவகாரம் இனிமேல் அடுத்தடுத்த வரும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இது போன்ற கொள்கைகள் கடைபிடிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் அடுத்ததாக வெளியாக போகும் வாரிசு துணிவு வரைபடங்களின் டிக்கெட் விலைகளையும் குறைத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்களுக்கு வருகிறார்கள்.