இயக்குனர் மணிரத்தினம் உண்மை மற்றும் நாவல் சம்பந்தமான கதைகளை வைத்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்க இயக்குனர் மணிரத்தினம் மூன்று தடவை முயற்சி எடுத்தார் ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இருப்பினும் தொடர்ந்து முயற்சித்தார்.
அந்த வகையில் ஒரு வழியாக தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை 500 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார் இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து மக்களை கவர்ந்து இழுத்தது படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிறந்த நடிகர்களை நடிக்க வைக்க இயக்குனர் மணிரத்தினம் பல நடிகர் நடிகைகளை தேர்வு செய்தார்.
ஆனால் ஒரு சிலர் சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது அது யார் யார் என்பது குறித்து பார்ப்போம். இந்த படத்தில் சிம்பு மற்றும் நயன்தாராவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மணிரத்தினம் முயற்சி செய்தார். முதலில் இருவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டனர் ஆனால் இடையில் சிம்பு நடித்தால் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என நயன்தாரா தெரிவிக்க..
பின் சிம்பு இதை அறிந்து கொண்டு அவரை முன்வந்து இந்த ப்ராஜெக்டில் இருந்து நான் விலகுகிறேன் வேறு ஒரு ப்ராஜெக்டில் நாம் இணைந்து கொள்ளலாம் சார் என தெரிவித்தார் ஆனால் சிம்பு போனது மணிரத்தினத்திற்கு சற்று வருத்தத்தை கொடுத்தது. இது இப்படி இருக்க நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அவருக்கு சந்தேகம் வந்தது அதனால் மீண்டும் ஒருமுறை கதையை இயக்குனரிடம் கேட்டுள்ளார்.
இந்த கதாபாத்திரத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை என தெரிந்து கொண்டார். இதனால் தனது மார்க்கெட்டு மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கும் என நினைத்து பொன்னியின் செல்வன் படத்திலிருந்து தான் விலகுவதாக கூறியுள்ளார் ஆனால் தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவிற்கு அதிக சம்பளம் தருவதாக தெரிவித்ததாம். இருப்பினும் நயன்தாரா திட்டவட்டமாக இந்த படத்தில் நடிக்க முடியாது என தெரிவிக்க பின் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைத்துள்ளனர்.