“பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்க விக்ரமுக்கு 3 சாய்ஸ் கொடுத்த மணிரத்தினம்.! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ட்விட்டர் பதிவு.

vikram
vikram

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். இவர் இதுவரை ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களை வைத்து பல சிறப்பான படங்களை கொடுத்துள்ளார் இப்பொழுது கூட இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை  தழுவி பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து உள்ளார்.

அதில் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம், திரிஷா, சரத்குமார், ஐஸ்வர்யாராய், பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயசித்ரா, கிஷோர்  மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதுவரை இந்த படத்தில் இருந்து வெளிவந்த பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆடியோ லான்ச் என அனைத்தும் அற்புதமாக இருந்தது மேலும் ரசிகர்களுக்கும் இந்த படத்தை காண எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளது. இது இப்படி இருந்தாலும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமுக்கு ஒரு சின்ன கதாபாத்திரத்தை கொடுத்துள்ளனர் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

மேலும் மணிரத்தினத்திற்கும் விக்கிரமுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் சொல்லி பிரச்சனையை பெருசாக ஊதினர் ஆனால் உண்மையில் நடந்ததே வேற… இயக்குனர் மணிரத்தினம் படத்தின் மூன்று முக்கிய கதாபாத்திரங்களை நடிகர் விக்ரம் கையில் கொடுத்து.

எந்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமோ அதை தேர்வு செய்து கொள் என கூற நடிகர் விக்ரம் தான் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தை எடுத்தாராம். இதை பார்த்ததும் மணிரத்தினம் புன்னகைதாராம் ஏனெனில் கதையின் முக்கியத்துவமான கதாபாத்திரமே அதுதான் என தெரிந்துதான் எடுத்திருக்கிறார் நடிகர் விக்ரம். அதனால் அவர் எதுவும் வருத்தப்படவில்லை என செய்திகள் வெளி வருகின்றன.