இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் இவர் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தை பிரம்மாண்ட பொருள் செலவில் எடுத்துள்ளார் படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.
அதில் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படthilq கார்த்தி, ஜெயராம், விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ், பார்த்திபன், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர் குறிப்பாக ரஜினி, கமல் போன்ற டாப் நட்சத்திர பட்டாளங்கள் பலரும் பொன்னியின் செல்வன் படத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் படத்திலிருந்து இதுவரை ஃபஸ்ட் லுக் போஸ்டர், பாடல், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திழித்தது.
அதனை தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் அண்மையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் ரஜினி கமல் போன்ற டாப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய பிரமாண்ட இயக்குனர் சங்கர்.. மணிரத்தினம் சார் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கப் போகிறார். என்று தெரிந்ததும் மிகவும் ஆர்வமாக இருந்தது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் அருமையாக இருக்கும் என்று நினைத்தேன்.
பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் தற்பொழுது விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது தமிழ் சினிமா ரசிகனாகவும் மணிரத்தினம் சார் ரசிகனாகவும் பொன்னியன் செல்வன் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கிடக்கிறேன் என வெளிப்படையாக பேசி உள்ளார்.