“பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்க மணிரத்தினம் வாய்ப்பு கொடுக்கவில்லை – புலம்பி தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

rajini-
rajini-

இயக்குனர் மணிரத்தினம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஒரு வழியாக எடுத்து முடித்துள்ளார் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீஸ்ஸாக இருக்கிறது இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ், விக்ரம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து இதுவரை பல்வேறு போஸ்டர் பாடல் டீசர் போன்றவை வெளிவந்த நிலையில் நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் கோலாகலமாக நடந்து அரங்கேறியது இதில்  படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொடங்கி சிறப்பு விருந்தினராக கமலஹாசன், ரஜினிகாந்த், ஷங்கர் பலர் கலந்து கொண்டன.

ர் அப்பொழுது பேசிய ரஜினிகாந்த் சில விஷயங்களை கூறியுள்ளார் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டைராக நடிக்க வேண்டும் என மணிரத்தினிடம் நான் கேட்டேன் ஆனால் மணிரத்தினம் உங்களுடைய ரசிகர்களிடம் என்னால் தீட்டு வாங்க முடியாது எனக்கூறி மறுத்துவிட்டார்.

ஒருமுறை பிரபல பத்திரிக்கை ஒன்றில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிடம் வாசகர் ஒருவர் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தால் அதில் வந்தியத்தேவன்னாக யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கேட்டுள்ளார் அதற்கு ஜெயலலிதா அவர்கள் ரஜினிகாந்த் என ஒரே வரியில் கூறினார்.

ரஜினிக்கு குஷி ஆகிவிட்டதாம் அதன் பின் நான் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். இதைக் கேட்ட பிறகுதான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கட்டாயம் நடிக்க வேண்டும் என இருந்தேன் ஆனால் இயக்குனர் மணிரத்தினம் தன் ரசிகர்களை காரணம் காட்டி சின்ன ரோல் கூட கொடுக்க மறுத்து விட்டார் என ரஜினி வருத்தத்துடன் சொன்னார்.