வரலாற்று நாவல்களுக்கு எப்பொழுதுமே மதிப்பு உண்டு அந்த வகையில் பொன்னியின் செல்வன் நாவல் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமடைந்தது அதை தழுவி இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்தார் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளிவந்து..
மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தன.. இதை உணர்ந்து கொண்ட படக்குழு இரவு / பகல் பார்க்காமல் விறுவிறுப்பாக படத்தை எடுத்துள்ளது.
படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28-ம் தேதி கோலாகலமாக வெளியாக உள்ளது அதற்கு முன்பாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் போன்றவற்றை வெளியிட்டு..
படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது நேற்று படத்தின் இசைவெளியிட்டு விழா கோலாகலமாக நடந்தது இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தொடங்கி சிறப்பு விருந்தினராக கமலஹாசன், சிம்பு போன்றவர்கள் கலந்து கொண்டனர் அப்பொழுது மேடை ஏறிய சினிமா பிரபலங்கள் தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்தும், மணிரத்தினம் குறித்தும் பேசினார்.
அந்த வகையில் நடிகர் சரத்குமார் பேசியது மணிரத்தினம் என்னை பார்த்து ரொமான்ஸ் வராதா என கேட்டுவிட்டார் நான் இரண்டு முறை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் அவர் என்னை கேட்டதும் எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது. உலக அழகி ஐஸ்வர்யாராயை கட்டிப்பிடிக்கும் காட்சியை எனக்கு கொடுத்ததற்கு நன்றி என சரத்குமார் மேடையில் பேசினார் இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.