இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ளா துணிவு திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் இன்றிலிருந்தே ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் துணிவு திரைப்படத்தில் ஒரு முக்கிய முன்னணி நடிகர் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் உச்சம் நட்சத்திரமாக இருக்கும் நடித்து அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்று. இந்த திரைப்படம் நாளை வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகமளித்தாலும் இந்த படத்தில் பல சஸ்பென்ஸ் இருப்பதாக துணிவு படத்தில் நடித்த சமுத்திரக்கனி அவர்கள் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியான உடனே டிரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் போல் இருக்கிறது என்று கூறி வந்தார்கள் அதற்கெல்லாம் பதிலடி கொடுத்து வந்த ஹெச் வினோத் துணிவு படத்தில் பல சஸ்பென்ஸ் இருப்பதாக கூறியிருந்தார்.
அதில் ஒன்றுதான் தற்போது வெளியாகிய வைரலாகி வருகிறது அதாவது துணிவு படம் மங்காத்தா படத்தின் இரண்டாவது பாகம் என கூறிவந்த ரசிகர்கள் இது மங்காத்தா போல் இருக்காது என்று விளக்கம் அளித்து வந்தார் ஹெச் வினோத். ஆனால் தற்போது இது மங்காத்தா பாடத்தின் இரண்டாவது பாகப்தான் தான் என்று உறுதி செய்யும் வகையில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது துணிவு படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடிகர் அர்ஜுன் அவர்கள் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் அர்ஜுன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல தற்போது துணிவு திரைப்படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிகர் அர்ஜுன் நடித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் துணிவு மங்காத்தா போல் இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.