Ttf Vasan: ரஜினியினை தொடர்ந்து அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு சோசியல் மீடியாவில் நாள்தோறும் இருந்து வரும் நிலையில் தற்பொழுது இயக்குனர் ஒருவர் அடுத்த சூப்பர் ஸ்டார் டிடிஎஃப் வாசன் தான் என அளித்திருக்கும் பேட்டி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சினை ஏற்படுத்தி உள்ளது.
யூடியூப் மூலம் ஏராளமானவர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கும் நிலையில் அப்படி பிரபலமாகி இருப்பவர் தான் கோயம்புத்தூரை சேர்ந்த வாசன். தனது பைக்கில் பல இடங்களுக்கு ரைடு சென்ற வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இவர் வெளியிடும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க இவருடைய சேனலை ஏராளமானவர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். அப்படி சினிமா பிரபலங்களுக்கு இணையாக சோசியல் மீடியாவில் நல்ல மவுசுடன் 2k கிட்ஸ்களை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் இவருடைய பிறந்தநாள் நிகழ்ச்சி தனியார் ஹோட்டலில் கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர் சினிமா பிரபலத்தை பார்ப்பது போல ரசிகர்கள் பலரும் வந்தது ஆச்சரியப்பட வைத்தது. அப்படி எப்பொழுது டிடிஎஃப் இந்த அளவிற்கு பிரபலமடைய ஆரம்பித்தாரோ அப்பொழுதிலிருந்து ஏராளமான சர்ச்சைகளும் எழ ஆரம்பித்தது.
ரைடு செல்லும் போது வேகமாக சென்றதால் பல வழக்குகளை இவர் மேல் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு இப்படிப்பட்ட சூழலில் படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி இருக்கும் டிடிஎஃப் வாசன் செல்லம் என்பவர் இயக்கம் மஞ்சள் வீரன் என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்.
மஞ்சள் வீரன் படத்தினை தி பட்ஜ்ரெட் பிலிம் கம்பெனி தயாரித்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிடிஎஃப் வாசனின் பிறந்த நாளான கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தின் ரிலீசாக ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர் செல்லம் பேசுகையில், ஹீரோ டிடிஎஃப் வாசனுக்கு கடவுளின் ஆசை இருக்கிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகக்கூடிய அனைத்து தகுதிகளும் டிடிஎஃப் வாசகனுக்க இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு முன் இந்த படம் மெகா ஹிட் ஆகும் நிச்சயம் தேசிய விருதை பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.