90 மற்றும் 80களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திர வேடம், அப்பா, போன்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
அதன் பிறகு இவர் சமீப காலங்களாக நடித்து வரும் திரைப்படங்கள் எதுவும் சரிவர வெற்றியடையாத காரணத்தால் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு விவசாயம் செய்து சம்பாதித்து வரும் நெப்போலியன் சமீபத்தில் சென்னை திரும்பி இருக்கிறார்.
அங்கு தான் வசித்த வீடு மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்துவிட்டு அமெரிக்காவிலும் செட்டில் ஆகிவிடலாம் என்று நோக்கத்தில் சென்னை திரும்பி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தான் வசித்த வீட்டையும் சொத்தையும் ஏழு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார் நடிகர் நெப்போலியன்.
அனைத்து சொத்துக்களையும் விற்று விட்டு சில நாட்கள் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருந்த நடிகர் நெப்போலியன் அமெரிக்கா செல்வதற்கு முன் தனது நெருங்கிய நண்பர்களை சந்தித்து அவர்களுடன் பல மணி நேரம் உரையாடல் நடத்தி இருக்கிறார். இனிமேல் அமெரிக்கா போய் நான் திரும்ப மாட்டேன் என்று அவர்களிடம் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் தனது வீட்டில் வேலை பார்த்த அனைவரையும் நேரில் போய் சந்தித்து அவர்களுடனும் பல மணி நேரம் பேசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னிடம் வேலை பார்த்த நபர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார் என்று தகவலை அறிந்ததும் பல ரசிகர்கள் இப்படி ஒரு மனிதன் இருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டு அவரை வாழ்த்தி வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் தன்னுடன் வேலையை பார்த்த ஒரு நபர்களுக்கு 20000 சம்பளம் கொடுத்து வந்த நிலையில் அவர்கள் வேலை செய்யாமலே 25 ஆயிரம் வரை சம்பளம் மாத மாதம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடன் வேலை பார்த்த ஒரு நபரின் மகளுக்கு பத்து லட்சம் செலவு செய்து திருமணம் நடத்தி வைத்துள்ளார் இதனால் அவர் உயரத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்தவர் என்று கூறி வருகின்றனர்.