விதைகளை கொண்டே ஓவியம் வரைந்து அசத்திய தன்னார்வலர்.!அதுவும் யார் புகைப்படம் தெரியுமா

man
man

மறைந்த அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி தன்னார்வ மாணவர் ஒருவர் 2020 விதைகளை வைத்து அப்துல்கலாமின் உருவ புகைப்படத்தை ஓவியமாக வரைந்துள்ளார்.

இவர் மதுரை செனாய் நகர் பகுதியைச் சேர்ந்தவராவார் அப்பகுதியில் வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் சப்ளை வேலையை செய்து வருகிறார் இவர் பெயர் அசோக்குமார் ஆகும்.

அதுமட்டுமல்லாமல் கோரானான் பிரச்சனையின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை மக்களும், தினக்கூலிகளும் போராடி வரும் நிலையில் பல வகையான உதவிகளைச் செய்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தன்னார்வலராக இணைந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அசோக்குமார் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் லட்சிய ஆண்டான 2020ஆம் ஆண்டை அனைவருக்கும் நினைவு படுத்தும் வகையில் 2020விதைகளை வைத்து முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் புகைப்படத்தை ஓவியமாக வரைந்துள்ளார் இப்புகைப்படத்தை பார்த்த பல சமூக ஆர்வலர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.

கொடியா கவிதை,  சீதாப்பழ விதை,  குதிரைக் குளம்பு விதை,  சிறிய கவிதை, வேங்கை மரம்,  புளிய மரம் உள்ளிட்ட ஏழு வகையான விதைகளை கொண்டு அப்துல் கலாமின் புகைப்படத்தை வரைந்துள்ளார்.