விஜய காந்துக்கு கிடைத்த வாய்ப்பை தட்டி தூக்கிய மம்மூட்டி.! வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம்..

mammooty
mammooty

1998ஆம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் மறுமலர்ச்சி. இந்தப் படத்தில் முதலில் விஜயகாந்த் தான் நடிப்பதாக இருந்தது ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்காமல் போக பிறகு மம்முட்டிக்கு இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிகை தேவயானி நடித்த அசத்தியிருந்தார். இவர்களுடைய கெமிஸ்ட்ரி மிகவும் அருமையாக இருந்ததால் தற்போது வரையிலும் நன்றி சொல்ல உனக்கு பாடல் பிரபலமாக இருந்து வருகிறது. இவர்களை அடுத்து மனோரமா, ரஞ்சித் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் பாரதி இயக்கத்தில், ஹென்றியின் தயாரிப்பில் உருவானது.

மேலும் இந்த படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்த நிலையில் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்றது மறுமலர்ச்சி படம். எனவே இந்தப் படம் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் தெலுங்கில் ராஜசேகர் மற்றும் சௌந்தர்யா நடிப்பில் சூரியிடு என்றும், கன்னட மொழியில் விஷ்ணுவரதன் மற்றும் ஸ்ருதி நடிப்பில் சூரப்பா என்றும், ஹிந்தியில் மிதுன் சக்கரவர்த்தி நடிப்பில் பிஹூல் ஆர் அக் என்றும் வெளியானது.

இவ்வாறு இந்தப் படத்தில் முதலில் விஜயகாந்த் நடிக்க வைப்பதற்காக படக் குழுவினர்கள் முடிவு செய்த நிலையில் அவரிடம் பேச்சுவார்த்தை நடப்பது பிறகு சில காரணங்களினால் விஜயகாந்த்தால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய் உள்ளது அதன் பிறகு தான் மம்மூட்டி அவர்களை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர்.

மேலும் இந்த படத்தைப் பற்றி இயக்குனர் பாரதி இசையமைப்பாளர் எஸ்ஏ ராஜ்குமாரிடம் கணவன்-மனைவிக்கு இடையே இருக்கும் உன்னதமான உறவை வெளிப்படுத்தும் வகையில் பாடல் அமைய வேண்டும் என கூற ராஜ் குமாரும் அரை மணி நேரம் எடுத்துக்கொண்டு அதன் பிறகு நன்றி சொல்ல உனக்கு என்ற பாடலை எழுதினாராம் இவ்வாறு தற்பொழுது வரையிலும் இந்த பாடல் மிகவும் ஃபேமஸாக இருந்து வருகிறது.