இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் மாமன்னன். இந்த படம் ஜூன் 29 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் உதயநிதியின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டினர்.
ஆனால் உண்மையில் படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் பலரும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்தோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து இந்த படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ், ரவீனா ரவி, கீதா கைலாசம், அழகம் பெருமாள், லால்..
மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் குறிப்பாக வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பு பலருக்கும் ரொம்பவும் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது படத்தின் விமர்சனம் தொடர்ந்து நன்றாக இருப்பதால் வசூலும் அடித்து நொறுக்கி வருகிறது ஐந்து நாட்கள் முடிவில் மட்டும் 40 கோடி அள்ளி உள்ளதாக தெரிவிக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் மாமன்னன் திரைப்படம் உதயநிதிக்கு கடைசி படம் என்பதால் இந்த படத்தில் நடிக்க அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு தகவலும் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் உதயநிதியின் சம்பளம் சுமார் 5 கோடி என சொல்லப்படுகிறது.
மற்ற நடிகர், நடிகைகளின் சம்பளம் குறித்தும் தகவல் வெளியாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் 2 கோடியிலிருந்து 3 கோடி என சொல்லப்படுகிறது மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாஸ்லின் சம்பளம் 2 கோடியிலிருந்து 3 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது ஆனால் உறுதியாக சொல்லப்படவில்லை.