மக்களின் அமோக வரவேற்பு “மாமன்னன்” படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி..! இதுவரை அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

mamannan
mamannan

இளம் இயக்குனர்கள் அடுத்தடுத்து நல்ல படங்களை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் இளம் இயக்குனர் மாரி செல்வராஜ் சமூகத்திற்கு தேவையான படங்களை கொடுத்து வருகிறார். இவர் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து எடுத்த திரைப்படம் தான் மாமன்னன்.

இந்த படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்திருந்தார் இந்த படமும் அவருக்கு கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ்,  ரவீனா ரவி, கீதா கைலாசம், லால் மற்றும் பலர் நடித்திருந்தனர்.  மாமன்னன் படம் ஜூன் 29 தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

படத்தின் ஒவ்வொரு சீனும் சிந்திக்கும்படியும் , நல்ல கருத்துக்கள் நிறைந்த படமாக இது இருந்ததால் அனைத்து தரப்பட்ட மக்கள் மத்தியிலும் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது. அதன் காரணமாக மாமன்னன் வெற்றி நடை கண்டு வருகிறது. அண்மையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.

மேலும் நடிகர்  உதயநிதி இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு மினி கூப்பர் கார் ஒன்றை வழங்கினார் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் வடிவேலுக்கு ஆள் உயரம் மாலை ஒன்றை போட்டு அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படத்தின் வசூல் அதிகரித்த வண்ணமே  இருக்கிறது.

நேற்றுடன் மட்டும் 50 கோடி வசூல் அள்ளி நிலையில் தற்போது 9 நாட்கள் முடிவில் உலக அளவில் 54 கோடியும், தமிழகத்தில் மட்டும் 41 கோடி வசூல் அள்ளி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  வருகின்ற நாட்களில் மாமன்னன் படத்தில் வசூல் இன்னும் உயரமோ தவிர குறையாது என கூறி பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.