தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ வைகை புயல் வடிவேலு ஆரம்பத்தில் காமெடியனாக நடித்த வெற்றி கண்ட இவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் அசத்தினார் அந்த வகையில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலி ராமன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருந்த..
இவர் இம்சை அரசன் இரண்டாவது பாகத்தின் போது இயக்குனர் ஷங்கருக்கும், வவேலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வடிவேலு நான்கு ஆண்டுகள் சினிமா பக்கமே நடிக்கவில்லை ஒரு வழியாக லைகா நிறுவனம் முன் வந்து இந்த பிரச்சனையை தீர்த்து வைத்ததை தொடர்ந்து ரீ என்ட்ரி கொடுத்து வடிவேலு நடித்து வருகிறார் முதலில் சுராஜ் இயக்கத்தில் உருவான நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார் இந்த படம் மோசமான விமர்சனத்தை பெற்று ஓடியது அதனை தொடர்ந்து மாரி செல்வராஜுடன் கைகோர்த்து மாமன்னன் படத்தில் நடித்தார்.
படம் ஜூலை 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளிவந்து வெற்றி நடைபெறுகிறது. அதற்கு முக்கிய காரணம் வடிவேலு என கூறப்படுகிறது அந்த அளவிற்கு தனது கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து கைதட்டல் வாங்கி வருகிறார் அவருக்கு நிகராக பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படத்தின் வசூலும் அடித்து நொறுக்கி வருகிறது. இதுவரை மட்டுமே மாமன்னன் திரைப்படம் எட்டு நாள் முடிவில் உலக அளவில் சுமார் 52 கோடி வசூலித்துள்ளதாம். தமிழகத்தில் மட்டுமே மாமன்னன் திரைப்படம் சுமார் 40 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
உதயநிதியின் சினிமா கேரியரில் இந்த திரைப்படம் தான் அதிக வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் சந்தோஷம் அடைந்துள்ள உதயநிதி மாரி செல்வராஜ்க்கு மினி கூப்பர் கார் ஒன்றை ஏற்கனவே வழங்கியிருந்தார் அண்மையில் கூட வடிவேலுக்கு ஆள் உயர மாலை ஒன்றை போட்டு அழகு பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.