பட்டிதொட்டி எங்கும் வசூல் வேட்டை நடத்தும் உதயநிதியின் “மாமன்னன்” – 5 நாட்கள் முடிவில் இவ்வளவா.?

mamannan
mamannan

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார் முதலில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்து வெற்றியை கண்டார் அதனைத் தொடர்ந்து நண்பேண்டா, கண்ணே கலைமானே, மனிதன், சைக்கோ என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த உதயநிதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் தான்.

தனக்கு கடைசி படம் எனக் கூறினார் இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகரித்து இருந்தது. மாமன்னன் படத்தின் டிரைலர் வெளிவந்து அதை பெரிய அளவில் கூடுதலாகிய நிலையில் ஜூன் 29ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது படம்..

முழுக்க முழுக்க ஆக்சன், எமோஷனல் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்தது மேலும் வடிவேலு, பகத் பாஸில், உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்ததால் தற்பொழுது படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக வடிவேலுவின் நடிப்பு வேற லெவலில் இருந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது நேற்று வரை 33 கோடி வசூல் அள்ளிய  நிலையில் ஐந்து நாள் முடிவில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவலும் கிடைத்துள்ளது.

அதன்படி இதுவரை மட்டுமே சுமார் 40 கோடி வசூலித்துள்ளதாம். மாமன்னன் படத்தின் பட்ஜெட் 35 கோடி அதைவிட 5 கோடி அதிகமாகவே அள்ளி  லாபம் அள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் மாமன்னன் படக்குழு செம சந்தோஷத்தில் இருக்கின்றது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தில் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.