நடிகர் உதயநிதி ஸ்டாலின் “ஒரு கல் ஒரு கண்ணாடி” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே வெற்றி படமாக மாறியதை அடைந்து நண்பேண்டா, மனிதன், கண்ணே கலைமானே, சைக்கோ போன்ற நல்ல படங்களை கொடுத்து தன் திறமையை வெளிக்காட்டினார்.
இப்படி வெற்றி நடிகராக ஓடிக்கொண்டிருந்த உதயநிதி இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைந்து நான் பண்ணும் மாமன்னன் படம் தான் எனக்கு கடைசி படம் என அறிவித்தார் இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டது.
படம் ஜூன் 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படம் சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்களை எடுத்துரைத்திருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியன்ஸ் மத்தியில் கைதட்டல் வாங்கியது. மேலும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் சிறப்பாக நடித்து இருந்தனர்.
அந்த வகையில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் போன்ற நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது இதனால் படம் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி நடை கண்டு வருகிறது. இதனால் மூளை முடுக்கு எங்கும் வசூல் வேட்டை நடந்து வருகிறது. 35 கோடி பட்ஜெட்டில் உருவான மாமன்னன் திரைப்படம்..
11 ஒரு நாள் முடிவில் உலக அளவில் சுமார் 60 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது தமிழகத்தில் மட்டுமே மாமன்னன் திரைப்படம் 40 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளி மாமன்னன் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைவது உறுதி எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.