2023 நடிகர், நடிகைகளுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் 29ஆம் தேதி வெளியாகி அதை நிறைவேற்றியது என்றே சொல்லலாம்..
படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படியும் சிந்திக்கும்படியும் இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்றது. மேலும் படத்தில் வடிவேலு, பகத்பாசில், உதயநிதி, கீர்த்தி சுரேஷ் போன்றவர்களின் நடிப்பும் மிரட்டியது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் வசூலில் அடித்து நொறுக்கியது.
5 நாட்களிலேயே போட்டோ காசை எடுத்த படக்குழு செம்ம சந்தோஷத்தில் கேக் வெட்டி கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் நடிகர் உதயநிதி மாரி செல்வராஜ் மினி கூப்பர் கார் ஒன்றை வழங்கினார் அதன் மதிப்பு கூட 55 லட்சம் என சொல்லப்பட்டது அதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலுக்கு ஆள் உயரம் மாலை ஒன்றையும் உதயநிதி போட்டு அழகு பார்த்தார்.
தொடர்ந்து மாமன்னன் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதன்படி மாமன்னன் திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் முடிவில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. 10 நாள் முடிவில் மாமன்னன் திரைப்படம் உலக அளவில் 57 கோடியும்..
தமிழகத்தில் மட்டும் 43 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளி நிச்சயம் 100 கோடி கிளப்பில் மாமன்னன் திரைப்படம் இணையும் என பலரும் உறுதியாக கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்பொழுது மாமன்னன் பட குழுவை சந்தோஷப்படுத்தி உள்ளது மேலும் இணையதளத்தில் வைரலாகியும் வருகிறது.