இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் தற்போது நல்ல வசூல் பெற்று வருகிறது. வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவின் நடிப்பு எந்த அளவிற்கு ரசிகர்கள் ரசித்தார்களோ அதே அளவிற்கு இந்த படத்தில் அமைந்துள்ள அனைத்து பாடலையும் அவர்கள் கேட்டு ரசித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் மரண ஹீட் அளித்துள்ளது.
அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற மல்லிப்பூ பாடல் தற்போது இளசுகளை ஆட்டம் போட வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் ஏ ஆர் ரகுமான் இசையில் மது ஸ்ரீ குரலில் வெளியாகிய இந்த பாடல் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது. மேலும் இந்த பாடலைக் கேட்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.
வெளிநாடுகள் மற்றும் வெளியூரில் இருக்கும் கணவரை நினைத்து மனைவி ஏக்கத்துடன் பாடும் வகையில் இந்த பாடல் வரிகள் இருக்கும். இதுதான் இந்த பாடலுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்திருக்கிறது. அதனை தொடர்ந்து மது ஸ்ரீயின் இனிமையான குரலும் பாடல் எடுக்கப்பட்ட விதமும் ரசிகர்களை பரவசத்தில் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
தற்போது எங்கு திரும்பினாலும் இந்த பாடல் மட்டுமே கேட்க முடிகிறது அது மட்டுமல்லாமல் பல இளைஞர்கள் இந்தப் பாடலை தான் மொபைலில் காலர் டியூனாக வைத்துள்ளார்கள். இப்படி பலரின் பாராட்டுகளைப் பெற்ற இந்த பாடல் தற்போது முழு வீடியோவுடன் வெளியிட்டுள்ளது படகுழு.
இந்தப் பாடல் வெளியான ஒரு சில நிமிடங்கள் இணையத்தில் ஏகப்பட்ட பார்வையாளர்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் குவித்து கொண்டு இருக்கிறது. அதிக பார்வையாளர்களை கடந்து சென்ற இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இதோ அந்தப் பாடல்.