நடிகர் சூர்யா ஜெய்பீம் திரைப்படத்தை தொடர்ந்து பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியை மையமாக வைத்து உருவாகி உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இந்தப் படத்தில் சூர்யாவுடன் கை கோர்த்து பிரியங்கா மோகன், வினய் ராய், சூரி, சத்யராஜ், ஜெயபிரகாஷ், சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லே போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஆகமொத்தம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது இதன் மூலம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சூர்யாவின் சமீபகால படங்கள் அனைத்துமே OTT தளத்தில் தான் வெளியாகியிருந்த நிலையில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகுவதால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஒரு வசூலை குவிக்கும் என்பது மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் கருத்தாக இருக்கிறது.
எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் நன்றாகவே இருக்கிறது. நடிகர் சூர்யாவுக்கு தமிழை தாண்டி மலையாளத்தில் நல்ல ரசிகர் பட்டாளம் இருப்பதால் அங்கு இதுவரை அவரது திரை படங்கள் நல்ல வசூலை அள்ளி உள்ளனது.
அதனால் அங்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டியின் படமும் திடீரென பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகிறது இதனால் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வசூல் பாதிக்கும் என தெரியவந்துள்ளது இருப்பினும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.