ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.! ஒருவேளை வில்லன் ரோலா

jeyilar
jeyilar

விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலிப் குமார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.ஆனால் பீஸ்ட் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவை விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணத்தினால் ரஜினி நெல்சன் படத்தில் நடிக்கலாமா என யோசித்து வந்த நிலையில் பிறகு வேறு ஒரு இயக்குனர் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.ஆனால் தற்பொழுது நெல்சனே ரஜினியின் படத்தை இயக்குகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அந்த படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தினை சன் பிரிக்ஸ் நிறுவனம் தயாரிக்க சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படப்பிடிப்பு தொடங்கியதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்கள்.இதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் திரையரங்குகளில் தொடங்கி காவல் நிலையத்தில் நடக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு இருக்கிறது.

jeyilar
jeyilar

மேலும் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது இந்நிலையில் ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது மேலும் அவர் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது இவ்வாறு இதற்கு முன்பு  இவர் விஷால் நடிப்பில் வெளிவந்த திமிரு திரைப்படத்தில் நடித்திருந்தார் அது மட்டும் இன்றி மலையாளத்தில் கம்மாட்டி படத்திலும் நடித்திருந்தார் ‌‌.

மேலும் தற்பொழுது ஜெயிலர் படத்தை சன் பிர்க்சஸ் நிறுவனம் தயாரிக்க அனிரூத் இசையமைக்க இருக்கிறார் இத்திரைப்படத்தில் ரஜினியை தொடர்ந்து பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த வருகிறார்கள். திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.