actress revathi sambath latest news: பொதுவாக மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி மவுசு உண்டு என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அதே போல அவர்கள் தமிழ் சினிமாவில் வந்த ஏராளமான சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகை ரேவதி சம்பத்க்கு கிட்டத்தட்ட 14 நபர்கள் தொல்லை கொடுத்ததாக ஒரு பெரிய லிஸ்டே சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவ்வாறு 14 நபர்கள் ஒரே நடிகையிடம் இப்படி நடக்க நேரிட்டது இதுவே முதல் முறை.
நடிகை ரேவதி சம்பத் ஒரு நடிகை மட்டும் அல்லாமல் சமூக ஆர்வலராகவும் தன்னுடைய பணியை மேற்கொண்டு வந்தார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரை உலகில் முதன்முதலாக 2019ஆம் ஆண்டு வெளிவந்த பட்னகர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் கால்தடம் பதித்தார்.
நமது நடிகை தற்போது உடல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். அதற்கு முக்கிய காரணமே அவருக்கு தொல்லை கொடுத்த குற்றவாளிகள் தான் காரணம் என அவர் கூறியது மட்டுமல்லாமல் அவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இந்த லிஸ்டில் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகராக சித்திக்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே நமது நடிகை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு தனக்கு சித்திக் என்பவர் தொல்லை கொடுத்துள்ளார் என கோரியிருந்தார்.
இந்நிலையில் தற்போது வெளியிட்ட லிஸ்டிலும் அவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது.
ராஜேஷ் தொச்சிவர் இவர் பட்னாகர் திரைப்படத்தின் இயக்குநர், ஆஷிக் மஹி (புகைப்படக்காரர்), நடிகர் சித்திக், நந்து அசோகன் (டி.ஒய்.எப்.ஐ. யூனிட் கமிட்டி உறுப்பினர்), மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குநர்), நடிகர் சிஜு, ஷானூப் கர்வத் மற்றும் சாக்கோஸ் (விளம்பர இயக்குநர்), சாருன் லியோ (ஈஎஸ்ஏஎப் வங்கி ஏஜெண்ட்), ராகேந்த் பை (காஸ்ட் மீ பெர்பெக்ட், காஸ்டிங் டைரக்டர்), பினு (சப் இன்ஸ்பெக்டர்), அபில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்), டாக்டர் அஜய் பிரபாகர்.