பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு இந்த படம் அவருக்கு 66 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி எடுத்து வருகிறார் படம் சென்டிமென்ட், ஆக்சன், காமெடி, காதல் என அனைத்தும் கலந்த ஒரு படமாக உருவாகி வருகிறதாம்..
இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. வாரிசு திரைப்படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இதுவரை வாரிசு படத்தில் இருந்து ஒரு சில போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி உள்ளதால்..
இப்பொழுது ஏதேனும் அப்டேட் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர் இப்படி ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் தளபதி விஜய் தனது 67-வது திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் அதற்கான வேலைகளும் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் தீவிரம் காட்டி வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 67 படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. தளபதி 67 திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சஞ்சய் தத் கெளதம் மேனன் போன்றவர்கள் நடிப்பது உறுதியாக கூறப்படுகிறது.
மறுபக்கம் திரிஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் இருக்கிறதாம். இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் நிதின் பாலி நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் கசிந்து உள்ளது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..