மலையாள சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்கள் இருந்தாலும் அவர்கள் எதையாவது ஒரு திரைப்படத்தில் சற்று சறுக்கலை சந்திப்பதோடு அந்த படம் கடைசியில் தோல்வியையும் சந்திக்கும் அதனால் சினிமா உலகில் நிரந்தர மற்றும் தொடர் வெற்றியை ஒருவர் பெறுவது அவ்வளவு சாதாரண விசயமல்ல.
நடிப்பு திறமை இருந்தாலும் கதைக்களத்தை சரியாக தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்றவாறு நடித்தால் மட்டுமே தொடர்ந்து வெற்றி கொடுக்க முடியும். அதற்கு ஏற்றவாறு மலையாள சினிமாவிலும் இந்திய சினிமாவிலும் தோல்வியை தழுவாத நடிகராக இருந்து வருகிறார் நடிகர் பகத் பாசில் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் இதுவரை சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
இதனால் தற்பொழுது பகத் பாசிலுக்கு தென்னிந்திய திரையுலகில் நல்ல மவுசு இருக்கிறது என கூறப்படுகிறது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே திறமையை வெளிக்காட்டினார்.
அதன்பின் தற்பொழுது கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார் இந்த திரைப்படமும் பகத் பாசில் இதற்கு ஒரு முக்கிய படமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பகத் பாஸில் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜயுடன் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவருடன் இணைந்து தங்க நகை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.