தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைதான் மாளவிகா மோகனன் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக கதாபாத்திரம் இல்லை என்றாலும் இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தது மக்களை கவர்ந்து விட்டது என்று தான் கூறவேண்டும் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து எந்த நடிகருடன் அடுத்ததாக நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தனுசுடன் இந்த திரைப்படத்தில் சரியாக நடித்து விட்டார் என்றால் இவர்தான் அடுத்த நயன்தாரா எனவும் இவரது ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் ஏனென்றால் இவர் இந்த திரைப்படத்தில் மிகவும் பிரபலமாகி விட்டால் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றி விடுவாராம்.
மேலும் தற்பொழுது ஓணம் ஸ்பெஷலாக பல நடிகைகளும் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் நடிகைகள் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகைகளின் புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
அதேபோல் தற்போது மாளவிகா மோகனன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.ஆம் பார்ப்பதற்கு மிகவும் அழகான உடை அணிந்து கவர்ச்சி இல்லாமல் போட்டோஷூட் நடத்தியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்பொழுதுதான் உங்களுக்கு தமிழில் நடிப்பதற்கு அனைத்து அம்சங்களும் இருக்கிறது என கூறி வருகிறார்கள்.