ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். மேலும் தமிழில் அறிமுகமாகிய பின் இரண்டாவது படமாக இவருக்கு தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்தவகையில் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றதோடு வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து இவர் பாலிவுட்டிலும் தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். மேலும் இன்னும் சில படங்களில் இவர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாளவிகா மோகனன் ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனன் மற்றும் மகேஷ்பாபு ஆகியவர்களின் புகைப்படத்தையும் இணைத்து இவர்களின் ஜோடி யாருக்கு பிடிக்கும் என்று கூறி சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்.
அதில் கமெண்ட் செய்யும் முதல்நபராக மாளவிகா மோகனன் நான் என்று பதில் அளித்துள்ளார். இதனை பார்த்தாலே தெரிகிறது இவர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறார் என்று விரைவில் இவரின் ஆசை நிறைவேறும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.