நடித்தது என்னமோ 2 படம் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அடிமட்டமாக கலாய்த்த மாளவிகா மோகனன்.?

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கெத்தாக வலம் வருபவர் தான் நயன்தாரா இவரது நடிப்பில் தற்போது நெற்றிக்கண் என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

மேலும் நயன்தாரா ரஜினி நடித்துவரும் அண்ணாத்த திரைப்படத்திலும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நயன்தாராவை மாஸ்டர் படம் நடிகை மாளவிகா மோகனன் கிண்டல் செய்துள்ளார் என்று ஒரு தகவல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில் சமீபத்தில் மாஸ்டர் படத்திற்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ள மாளவிகா மோகனன் நான் பார்த்ததில் நகைச்சுவையான சினிமா காட்சி என்றால் அது மிகப்பெரிய லேடி சூப்பர்ஸ்டார் நடிகை ஒருவர்தான்.

மருத்துவமனை காட்சியில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்  காட்சியில் லிப்ஸ்டி,கண் லைனர் போன்ற முழுமையாக மேக்கப் போட்டுக்கொண்டு நடித்த நடிகையும் அவர்தான் என்று கூறியுள்ளாராம்.

மேலும் மாளவிகா மோகனன் நயன்தாராவை குறிப்பிட்டு கூறியதாக நயன்தாராவின் ரசிகர்கள் மாளவிகா மோகனன் கூறியது ராஜா ராணி படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிதான் என்று கூறி வருவது மட்டுமல்லாமல் மாளவிகா மோகனன் மீது நயன்தாராவின் ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கிறார்களாம்.

இதையடுத்து இந்த தகவல் நயன்தாராவின் ரசிகர்கள்  மத்தியில மிக வேகமாக வைரலாகி வருகிறது.

nayanthara
nayanthara