தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை மாளவிகா மோகன் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதாவது தற்பொழுது பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ” இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நான் அனைத்து வருகிறார்.
எனவே இவர் இந்த படத்திற்காக தயாராகி வரும் நிலையில் அது குறித்த வீடியோவை தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார். நடிகை மாளவிகா மோகன் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் இந்த இரண்டு திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர் தற்பொழுது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது நடிகை மாளவிகா மோகனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலம்பம் பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார் அதில் அவர் கூறியதாவது சிலம்பம் என்ற அற்புதமான கலையில் ஒரு குழந்தையாக நான் அடி எடுத்து வைத்துள்ளேன். இந்த பயணத்தை மிகவும் அற்புதமாகவும், சுவாரசியமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளருக்கு நன்றி.
இது என்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை மாற்றப் போகிறது அந்த மாற்றத்தை காண என்னால் இதுக்கு மேலும் காத்திருக்க முடியாது எனக் கூறியுள்ளார் இவ்வாறு இவர் சிலம்பம் கற்றுக் கொள்ளும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளார்கள.
வீடியோவை பார்க்க எங்கு கிளிக் செய்யவும்.