நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் பட்டம் போலே என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் முதன் முதலாக ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்ட என்ற திரைப்படத்தன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த முதல் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் என்பதால் இவருக்கு மார்க்கெட் எகிறியது அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருவதால் அடுத்தடுத்து இவருக்கு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் மாளவிகா மோகனன் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். அந்த வகையில் இவர் அடிக்கடி ரசிகர்களுக்காக புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருவார்.
இந்த நிலையில் தற்போது வெள்ளை நிற சுடிதாரில் ரசிகர்களின் மனதை மென்மையாக்கும் வகையில் அழகாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருவது மட்டுமல்லாமல். சில ரசிகர்கள் வெள்ளை புறா ஒன்று பறக்குது பாரு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.