நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியாகி பேட்ட திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார், இவர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் மலையாளத் திரைப்படங்களில் முதன்முதலில் நடித்து வந்தார் அதன் பிறகு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழில் பட வாய்ப்பு பெற்றார்.
தற்பொழுது மாளவிகா மோகனன் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார், மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மாளவிகா மோகனன் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரை படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான்.
தற்பொழுது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது அதனால் பிரபலங்கள் போரடிக்காமல் இருக்க பழைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் மாளவிகா மோகனன் மரம் என்றால் மிகவும் பிடிக்கும் அதனைப் பார்த்தால் கட்டிப் பிடித்துக் கொள்வேன் எனக் கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் இயற்கை மீது இவ்வளவு ஆர்வம் உண்டா என மாளவிகா மோகனன் என்னை பாராட்டி வருகிறார்கள்.