திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகை மாளவிகா மோகனன்.! எத்தனை கோடி தெரியுமா.?

malaika-moganan-
malaika-moganan-

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன் முதலில் இவர் மலையாளத்தில் வெளியான பட்டம் போல என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் ஒன்று, இரண்டு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திடீரென தமிழ் பக்கம் வந்தார்.

எடுத்த உடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார் இந்த படத்தில் இவரைப் பற்றி பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது அடுத்ததாக மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படம் பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து தனுஷ் உடன் மாறன் திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது. இருப்பினும் இவருக்கான பட வாய்ப்பு குறையவே இல்லை தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்களான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ஹிந்தியில் yudhra என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி திரையுலகில் ஓடினாலும் மறுபக்கம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் நடிகை மாளவிகா மோகனன் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் இவர் மற்ற நடிகைகள் போலவே திடீரென தனது சம்பளத்தை உயர்த்தி தென்னிந்திய சினிமா உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த இவர் திடீரென கோடி கணக்கில் சம்பளம் கேட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்பொழுது  தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.