தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன், இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது அதனால் இவருக்கு நடிகர் விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என சமீபத்தில் அவரே கூறினார், எப்பொழுதும் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விஷயத்தை ஷேர் செய்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்துள்ளார்கள். ஏனென்றால் அவர் பதிவிட்டுள்ள அதாவது என்னுடைய 14 வயதில் நான் நிறவெறிக்கு ஆளானேன்.
அதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது ஒரு மகாராஷ்டிரா பெண்மணி தன்னுடைய மகனிடம் நீ நிறைய டீ குடிக்காதே அப்படி குடித்தால் இவளைப் போல் கருப்பாக ஆகி விடுவாய் என என்னை சுட்டிக்காட்டினார்கள் அப்பொழுது நான் மிகவும் மன வேதனை அடைந்தேன் அந்த வலி மிகவும் கொடுமையாக இருந்தது.
பொதுவா நீங்கள் எவ்வளவு நல்ல குணம் ஆனவர் என்பதைப் பொறுத்துதான் உங்களின் தகுதி, அதை விட்டுவிட்டு வண்ணம் அல்ல என்று கூறியுள்ளார், இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் மாளவிகா மோகனனுக்கு ஆறுதல் கூறியும் ஆதரவாகவும் பல கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.