ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இத்திரைப்படத்தில் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை. அதன் பிறகு விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தார்.
இவ்வாறு இவர் தமிழில் இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலம் அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது இவர் தனுஷுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இவர் சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில் மாளவிகா மோகனன் எப்படி சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மாளவிகா மோகனனின் அப்பா கே யு மோகனன் பிரபலமான ஒளிப்பதிவாளர். எனவே மாளவிகா மோகன்க்கு சினிமாவில் நடிக்க பெரிதாக விருப்பம் இல்லையாம்.
இந்நிலையில் மாளவிகா மோகனனை ஒரு விளம்பரம் படப்பிடிப்பில் நடிகர் மம்முட்டி பார்த்தாராம். அவ்வப்போது இவருடைய மகன் துல்கர் சல்மான் மலையாளத்தில் நடித்து வரும் பட்டம் போலே திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று முடிவு செய்தாராம்.
இதன் மூலம் மாளவிகா மோகனனின் அப்பாவிடம் சிபாரிசு கேட்டு மம்முட்டி கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் மாளவிகா மோகனன் முதல் முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பிரபலம் அடைந்துள்ளார்.