Malavika bike ride : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் மாஸ்டர் இத்திரைப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் அவர்கள் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
மாளவிகா மோகனன் ஆரம்ப காலத்தில் மலையாளத் திரைப்படங்களில் நடித்ததன் முலம் சினிமா பயணத்தை தொடர்ந்தார் இதனை அடுத்து அவர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழில் தற்பொழுது நடிக்க தொடங்கியுள்ளார். தளபதி விஜய் படத்தை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வபொழுது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள மாளவிகா மோகனன் அவர்கள் போரடிக்காமல் இருக்க பழைய வீடியோ மற்றும் போட்டோக்களை தூசு தட்டி எடுத்து தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
#MalavikaMohanan #actress pic.twitter.com/rzLOSWYAcx
— Tamil360Newz (@tamil360newz) April 21, 2020
அந்த வகையில் மாளவிகா மோகனன் ஸ்போர்ட்ஸ் பைக் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதைப்பார்த்த ரசிகர்கள் அஜித்தை போலவே உங்களுக்கும் ஸ்போர்ட்ஸ் பைக்கின் ஆசை இருக்கு போல என கூறிவருகின்றனர்.
#MalavikaMohanan #actress pic.twitter.com/fpCvs0wteM
— Tamil360Newz (@tamil360newz) April 21, 2020