நடிகை மாளவிகா மோகனன் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருபவர், இவர் தமிழில் முதன்முதலாக ரஜினி நடிப்பில் வெளியாகய பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த புகழையும் பெற்றார்.
முதல் திரைப்படமே ரஜினி திரைப்படம் என்பதால் இவருக்கு மார்க்கெட் எகிறி கிடைக்கிறது. பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது, மாஸ்டர் திரைப்படம் முடிவடைந்த நிலையில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் கொண்டே போகிறது.
இந்தநிலையில் மாளவிகா மோகனன் தெலுங்கில் உருவாகி வரும் ஹீரோ திரைப்படத்தில் நடித்துள்ளார், தமிழில் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைந்து விட்டார் அதனால் இவரின் சம்பளமும் அதிகரித்துவிட்டது. தற்பொழுது இவருக்கு பட வாய்ப்பும் அதிகரிக்க தொடங்கிவிட்டது.
ஊரடங்கு காரணமாக பல நடிகைகள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது அதனால் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள், எதுவும் செய்யவில்லை என்றால் காணாமல் போய் விடுவோம் என்ற பயத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள் நடிகைகள்.
அந்த வகையில் மாளவிகா மோகனன் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன நீங்கள் லுங்கி கட்டி போஸ் கொடுத்துள்ளீர்கள் என கலாய்த்து வருகிறார்கள்.