ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு முன்னணி நடிகைகாண இடத்தை துண்டு போட்டு பிடித்தவர் நடிகை மாளவிகா மோகனன் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக பேட்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.
இவர் முதல் திரைப்படம் ரசிகர்களிடம் மக்களிடம் நல்ல விமர்சங்களை பெற்றதால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது, அதனைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளிப் போய் கொண்டே போனது இந்த நிலையில் படத்தின் டீசரை வருகிற 14-ஆம் தேதி 6 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள் படக்குழு இந்த திரைப்படத்தை மாளவிகா மோகனன் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் மாளவிகா மோகனன் தனுஷுடன் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார், இந்த நிலையில் மாளவிகா மோகனன் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அதனால் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவார்.
அந்த வகையில் சமீபத்தில் கூட மஞ்சள் நிற உடையில் ஆளை மயக்கும்படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
அதேபோல் தற்பொழுது கண்ணாடி முன்பு நின்றபடி கவர்ச்சி பார்வையை வீசியுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.