சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவான பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இவ்வாறு தான் நடித்த முதல் திரைப்படம் சூப்பர் ஸ்டார் திரைப்படம் என்பதன் காரணமாக இவர் எளிதில் பிரபலமாகிவிட்டார்.
இவ்வாறு பிரபலமானது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்கமுடியாத நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் தெலுங்கு சினிமாவிலும் ஏகப்பட்ட திரைப்படங்களில் தற்போது கதாநாயகியாக நடித்து வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக தற்போது தளபதி விஜய்யின் திரைப்பட வாய்ப்பை பெற்று அவருடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இவ்வாறு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
மேலும் நடிகை மாளவிகா மோகனன் தற்சமயம் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் மாறன் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருவதாக தெரியவந்துள்ளது.பொதுவாக நடிகை மாளவிகா மோகனன் சிறந்த மாடல் அழகி என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக அவர் சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி போட்டோஷூட் மூலம் புகைப்படங்களை எடுத்து அவற்றை பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இவ்வாறு அவர் வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் தரமான புகைப்படமாக இருந்து வருகிறது.
பொதுவாக நமது நடிகை மிகவும் மாடலான கவர்ச்சியான உடை மட்டுமே அணிந்து புகைப்படம் வெளியிட்டு வந்த நிலையில் தற்போது மினுமினுக்கும் புடவையில் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளார்.