அடுத்த முன்னணி நடிகரின் படத்தை கைபற்றி உள்ளார் மாளவிகா மோகனன்.? செம்ம கடுப்பில் இருக்கும் இளம் நடிகைகள்.

malavika-mohnan-tamil360newz-

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று உள்ளளவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக  வெளிவராமல் இருந்து வருகிறது. இத்தகைய திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் தாண்டி இந்திய அளவில் இவர் பிரபலம் அடைந்து உள்ளார்.

malavika
malavika

இந்த நிலையில் தற்போது அவருக்கு இந்தியில் பட வாய்ப்பு வந்துள்ளது அதனை முன்னிட்டு அவர் மேலும் தனது சம்பளத்தை அதிகரித்து உளளார்.சினிமாவுலகில் இப்படி சிறப்பாக வந்துகொண்டிருக்கும் இவர் மேலும் சினிமா  உலகில் நீடித்து செல்ல ரசிகர்கள் பட்டாளம் வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட மாளவிகா மோகனன் திடீரென கவர்ச்சிக்கு இறங்கி கிளாமரான புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தமிழ் சினிமாவில் குறைந்த படங்களில் நடித்து அசுர வளர்ச்சியை பார்த்த இளம் நடிகைகள் பலரும் கோபம் அடையச் செய்துள்ளது.

சமிபத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் அதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள் மேலும்  திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். அது போல மாஸ்டர் படத்தின் கதாநாயகியான மாளவிகா மோகனன் தனுஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்.

danush

மேலும் இது அற்புதமான ஆண்டாக வர இருக்கிறது உங்களோடு பணிபுரிய ஆவலாக உள்ளேன் என தெரிவித்துள்ளார் அதற்கு அவர் பதில் அளித்த தனுஷ் நன்றி விரைவில் நடக்கும் என நினைக்கிறேன் என்று குறிப்பிட்டார்.தனுஷ் அவர்கள் தற்போது கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தினை தொடர்ந்து அவர் இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்களுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தெரியவருகிறது.

இப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. இவர் நடித்தால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகைகளை ஓவர்டேக் செய்வார் என நம்பப்படுகிறது.