தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் விஜய் இந்த திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஆண்ட்ரியா கௌரி கிஷன் சாந்தனு பாக்கியராஜ் என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
படத்தை கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போகிறது இந்த ஊரடங்கும் முடிந்ததும் திரையரங்கங்கள் திறக்கப்பட்டதும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து ஏதாவது அப்டேட் வருமா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து ட்ரெய்லரை விஜய் பிறந்த நாள் அன்று ரிலீஸ் செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் படக்குழு ரிலீஸ் செய்யாமல் ரசிகர்களை ஏமாற்றியது இந்தநிலையில் மாளவிகா மோகனன் பிறந்தநாளுக்கு மாஸ்டர் திரைப்படத்தின் படக்குழு மாஸ்டர் திரைப்படத்திலிருந்து ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டர் ரசிகர்களிடம் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் மாளவிகா மோகனன் இந்த புகைப்படத்தில் புடவை அணிந்து ஐடி கார்டுடன் தோற்றமளிக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவரும் கல்லூரிப் பேராசிரியராக நடித்துள்ளாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.