இளையதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படம் நாளை முன்னிட்டு பிரமாண்டமாக தமிழகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது அதற்கான டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக விற்கப்பட்டு பல சாதனைகளை மாஸ்டர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கண்டு வருகிறது,
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருப்பார்.மேலும் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளங்களில் பதில் அளித்து வந்த இவர் இவரது தீவிர ரசிகர் ஒருவர் தளபதி விஜய் உங்களை எப்படி அழைப்பார் என்று கேள்வி கேட்டுள்ளார்.
அந்த ரசிகனின் கேள்விக்கு பதிலளித்த மாளவிகா மோகனன் தளபதி விஜய் என்னை மல்லு என்றுதான் அழைப்பார் என்று அந்த ரசிகனின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் மாளவிகா மோகனன் மேலும் அவர் பதில் அளித்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவர் பகிரந்த பதிவு தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
Vijay Sir calls me Malu! ☺️ https://t.co/KXFg7fHUPG
— malavika mohanan (@MalavikaM_) January 11, 2021