இந்திய மாடல் அழகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் மாளவிகா மோகனன் இவர் மலையாளம், தமிழ் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல மலையாளம் மற்றும் கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.
பொதுவாக சினிமாவில் நடிக்க வந்த ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களிலேயே மிகவும் பிரபலம் அடைந்து விடுவார்கள் அதேபோல் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு ஓடிய நடிகைகளும் உண்டு. அப்படி சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலேயே பிரபலமடைந்த நடிகைகளில் மாளவிகா மோகனன் அவர்களும் ஒருவர் இவர் தமிழில் முதன் முதலாக ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்ட என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மேலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் அதன்பிறகு அவருக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்தநிலையில் மாளவிகா மோகனன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
ஏனென்றால் அந்த வீடியோவில் மாளவிகா மோகனன் அச்சு அசல் விஜய் போலவே மாறி சில க்யூட்டான ரியாக்சன் வேலை செய்கிறார் இந்த வீடியோ ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது விஜய்க்கு வாழ்த்து கூறும் விதமாக இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.