கனா காணும் காலங்கள் 2 சீரியலில் இதற்கு மேல் நான் இல்லை என நடிகை சங்கீதா காரணம் கூறியிருக்கும் நிலையில் அந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இளசுகளின் பேவரைட் சீரியலாக வளம் வந்து கொண்டிருக்கும் கனாக் காணும் காலங்கள் தொடர் ரசிகர்களின் ஆதரவுடன் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக இருந்து வரும் கனா காணும் காலங்கள் சீரியலில் இரண்டாவது பாகம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என நம்முடைய பள்ளி நினைவுகளை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
இவ்வாறு கனா காணும் காலங்கள் 2 சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் சங்கீதா இவர் மலர் கதாபாத்திரத்தில் டீச்சராக நடித்து வந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இவர் கனா காணும் காலங்கள் சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் இருந்து விடைபெறுகிறேன். மலர் மீது அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் நானும் உங்களை போலவே மலரை மிஸ் செய்கிறேன்..
சீசன் 2 வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி சூட் பண்ணியிருக்கிறார்கள் அந்த சமயத்தில் எனக்கு உடல்நிலை சரியாமல் போனதால் அவர்கள் கேட்கும் பொழுது என்னால் சூட்டுக்கு போக முடியவில்லை எனவே எனக்காக அவர்களும் வெயிட் பண்ணி பார்த்தார்கள் உடல்நிலை சரியாக டைம் தேவைப்பட்டது. அவர்களும் சூட் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது அதனால் வேறு வழி இல்லாமல் என்னுடைய கேரக்டருக்கு ரீப்ளேஸ்மென்ட் பண்ணிட்டாங்க மலரை நான் ரொம்பவே மிஸ் பண்றேன் இதற்கு முன்னால் நெகட்டிவ் ரோலில் பண்ணிக்கிட்டு இருந்தேன் நான் முதன்முதலாக மலர் டீச்சர் தான் பாசிட்டிவ் ரோடு பண்ணேன்.
நான் எதிர்பார்த்ததை விட அதிகமான அன்பை எனக்கு கொடுத்தீர்கள் வேறு வழி இல்லாமல் தான் இந்த கதாபாத்திரையில் இருந்து விலகி விட்டேன் சீசன் 2 நமக்கானது இல்லை என்கின்ற மைண்ட் செட்டுக்கு நான் வந்து விட்டேன் அடுத்து பண்ணப் போகிற ப்ராஜெக்ட் கண்டிப்பா நெகட்டிவ் ரோல் கிடையாது அதை ரொம்ப உறுதியாக சொல்வேன் சீக்கிரமே அடுத்த ப்ராஜெக்ட் பற்றி அப்டேட் பண்ணுகிறேன் என கூறியிருக்கிறார்.