தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டு இருக்கும் வெற்றிமாறன் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் தற்போது இவருடைய இயக்கத்தில் விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகம் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் சூரி கதைய நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ள நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கும் நிலையில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது எனவே தற்பொழுது ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர்கள் தீவிரம் காமித்து வருகின்றனர்.
இவ்வாறு முதன்முறையாக இந்த படத்தில் சூரி ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் மிகவும் ஆர்வமுடன் இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் நிலையில் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இவ்வாறு விடுதலை படத்தினை முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றி மாறன் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தினை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதியும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து நடிகர் சூரி ஹீரோவாக இந்த படத்தில் அறிமுகமாக இருக்கும் நிலையில் இதனை தொடர்ந்து இன்னும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், ஹீரோவாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு இவர்களுடைய கூட்டணியில் உருவாகி இருக்கும் விடுதலை பட்டத்தின் மேக்கிங் வீடியோ இதோ..