பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது இவ்வாறு ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்காக பல்வேறு தொகுப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளினிகள் விஜய் டிவியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை திரட்டியவர்தான் மாகாபா ஆனந்த். இவர் முதன் முதலாக ரேடியோ சேனலில் பணிபுரிந்து அதன்பிறகு படிப்படியாக தன்னுடைய திறமையும் மூலமாக தொலைக்காட்சிக்கு வந்தடைந்தார்.
இவர் விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சி மூலம் தான் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது பொதுவாக தொகுப்பாளினி டிடி எவ்வாறு நிகழ்ச்சியை கொண்டு செல்கிறாரோ அதே போல தான் மாகாபா வும் இவர் மிகவும் ஜாலியாக நிகழ்ச்சியை கொண்டு செல்வார்.
அந்தவகையில் அடுத்ததாக இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இவ்வாறு இந்த நிகழ்ச்சியிலும் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளி காட்டிய மாகாபா அதன்பிறகு விஜய் டிவியில் பல்வேறு விருதுகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அளவிற்கு தற்போது வளர்ந்து விட்டார்.
சமீபத்தில் சவுண்ட் பார்ட்டி என்ற ஷோவை தொகுத்து வழங்கி வரும் மாகாபா இந்த நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு தனது மனைவியை முதன் முதலாக அழைத்து வந்துள்ளார். இவ்வாறு மாகாபா செய்த செயல் காரணமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் இவர் என் மனைவியை பார்த்து பூரித்துப் போய் விட்டார்கள்.