பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் இந்த ஆண்டு அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ஹாஸ்டேக் குறித்து ஒரு பட்டியல் வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
அந்தவகையில் இந்திய அளவில் மிக அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ஒரு ஹேஷ்டேக் என்றால் அது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தான் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து இந்தியா மட்டுமின்றி மலேசியாவில் அதிகம் பயன்படுத்தபட்ட ஹேஷ்டேக் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் அதில் இடம்பெற்ற பெயர் என்னவென்றால் தல அஜித்தின் வலிமை திரைப்படம் மட்டும்தான்.
மேலும் அதில் தளபதி விஜயின் திரைப்படம் எந்த ஒரு திரைப்படமும் இடம் பெறாமல் இருந்தது மட்டுமில்லாமல் மற்ற எந்த நடிகர்களின் திரைப்படங்களும் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.
பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவருமே அசைக்க முடியாத ரசிகர் கூட்டத்தை வைத்து உள்ளார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் நடிப்பில் வெளிவரும் பெரும்பாலான அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்நிலையில் பெருமளவு இந்தியாவில் தளபதி விஜய் திரைப்படங்கள் அதிக அளவு பார்க்கப்பட்டாலும் வெளிநாட்டில் சுவாரசியத்தை கொடுக்கவில்லை.
அந்த வகையில் தல அஜித் இந்தியா மட்டுமன்றி வெளிநாட்டு ரசிகர்களை பெருமளவு கவர்ந்து விட்டார். ஆனால் தல ரசிகர்கள் வலிமை ஹேஷ்டேக்கை மிகவும் பிரபலம் படுத்தி வருகிறார்கள்.