விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்று மைனா நந்தினி வாங்கும் சம்பளம் குறித்த வீடியோ வெளியாகி பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அதாவது மைனா நந்தினி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்தார் மேலும் முக்கியமாக விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் ரட்சிதாவின் தோழியாக நடித்திருந்தார்.
இது இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது பிறகு தொடர்ந்து நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படி பிரபலம் அடைந்த இவர் ஒரு கட்டத்தில் திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான காமெடி கலாட்டா நிறைந்த திரைப்படமாக வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சூரியன் மனைவியாக நடித்திருந்தார்.
அதன் பிறகும் ஏராளமான திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சீரியல் நடிகரும், நடன இயக்குனருமான யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவ்வாறு சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் கருப்பாக இருந்த மைனா நந்தினி பலரும் கலாய்த்து வந்தார்கள்.
பிறகு மருந்துகள் மூலம் தன்னுடைய கலரை மாற்றி தற்பொழுது ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு அழகாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வரும் இவர் தொடக்கத்தில் இருந்து இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் தற்போது சினிமா பிரபலங்களை போல் மாறுவேடம் அணிந்து நடனமாடும் டாஸ்க் தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற வருகிறது .அதில் நாய் சேகர் கெட்ட பில் மைனா நந்தினி இருந்து வருகிறார் இந்நிலையில் அவருடைய சம்பளம் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது மைனாவும், மணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மணி ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இப்படி செய்வதாக பேசுகிறார்.
உடனே இரண்டு லட்சம் என நந்தினி கூறுகிறார் இதனை எல்லாம் கேட்டு அதிர்ச்சிய டைந்த தனலட்சுமி ஒன்றரை லட்சம் அப்ப 60 நாளைக்கு எவ்வளவு என்று ஆச்சரியப்படுகிறார் மேலும் அதற்கு மணி ஒரு 90 லட்சம் என கூறுகிறார் இவ்வாறு இவர்கள் பேசிக்கொள்ளும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பரிசை பெற்றவருக்கே 50 லட்சம் தான் ஆனால் இவர்கள் இந்த அளவிற்கு நடிக்க கூடாது.
#Myna ku oru naalaiku 1.5 latchamaa😲😲😲#Dhana shocked and we too#Biggbosstamil6 pic.twitter.com/QResalPCfz
— Aadhik Sri (@aadhik_vet09) December 8, 2022