பிக்பாஸ் வீட்டில் “மைனா நந்தினியின்” உறவினர் – அந்த போட்டியாளர் யார் தெரியுமா.?

bigboss-

தமிழில் மக்களின் பேராதரவை பெற்று சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது வெற்றிகரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் மக்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத பல பிரபலங்கள் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர். மேலும் பல துறைகளில் இருந்தும் பல கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிலும் குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் சிலர் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் அந்த வகையில் இந்த பிக் பாஸ் ஆறாவது நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி கலந்து கொண்டு உள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலமே பிரபலம் அடைந்தவர்.

இந்த சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்ததால் இவருக்கு மைனா நந்தினி என்று அடைமொழிப் பெயரும் வந்தது. மேலும் இதே சீரியலில் அவருடன் இணைந்து நடித்த ரக்ஷிதாவும் இந்த சீசனில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மைனா குறித்து ஒரு தகவல் ஒன்று சோசியல் மீடியா பக்கத்தில் வேகம் எடுத்துள்ளனர். அது என்னவென்றால் இந்த பிக்பாஸ் ஆறாவது சீசனில் மைனாவைப் போன்று மைனாவின் நெருங்கிய உறவினர் ஒருவரும் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது ஆம் அவர் ஏ டி கே தானாம்.

ஏ டி கே மைனாவின் மாமன் மகனாம் ஆனால் இதனை அவர்கள் பிக் பாஸ் வீட்டில் காட்டிக் கொள்ளாதவாறு நடந்து கொள்கிறார்கள் என சோசியல் மீடியா பக்கத்தில் பேசப்பட்டு வருகின்றன. ஏ டி கேவின் முன்னாள் மனைவி மற்றும் மகனின் புகைப்படம் கூட தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

adk
adk