விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது 5 சீசங்கள் முடிந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் அறிமுகமாக இருக்கிறது. கடந்த வாரம் 20 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக கமலஹாசன் அவர்களின் தொகுப்பில் ஒளிபரப்பான நிலையில் முதல் வார இறுதியில் போட்டியாளர்களுடன் கமலஹாசன் கலந்துக் கொண்டு பலருக்கும் அறிவுரை கூறினார்.
மேலும் விறுவிறுப்பாக பல விளையாட்டுகளும் வைக்கப்பட்டது. அதில் நடிக்கும் கமலஹாசன் அவர்கள் 40 நாட்களில் நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் நான்கு நாட்களில் நடந்திருக்கிறது என கூறி தொடங்கினார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மகேஸ்வரி, தனலட்சுமி இவர்கள் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்.
மேலும் அனைவரும் ஜிபி முத்துவை டார்கெட் செய்து வருவதால் ரசிகர்கள் தொடர்ந்து ஜிபி முத்துவிற்கு தங்களுடைய ஆதரவை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஜி பி முத்து தான் என்று கூறும் அளவிற்கு வந்துள்ளது. ஜிபி முத்துவின் வெகுளித்தனமான பேச்சு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் மைனா நந்தினி இந்நிகழ்ச்சிக்கு அறிமுகமாகியுள்ளார் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படி முதல் நாளே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது வைல்டு கார் என்ரியா ஒரு வாரம் கழித்து அறிமுகமாகி இருக்கிறார். வீட்டிற்குள் சென்றவுடன் வழக்கம் போல இவர் கலகலப்பாக அனைவரிடமும் பழக தொடங்கியுள்ளார்.
இதற்கு மேல் கண்டிப்பாக கலாட்டா நிறைந்த சுவாரசியமான எபிசோடுகளும் இருக்கும் இடம் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் ஜிபி முத்து மற்றும் நந்தினி இவர்களுடைய காம்போ நன்றாக இருக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நந்தினி என்று கொடுத்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.