பொதுமக்கள் என்று கூட பார்க்காமல் திமிராக பேசிய மைனா நந்தினி.! வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது 50வது நாளை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 50வது நாள் அன்று போட்டியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்டனர் அதில் ஒருவர் மைனா நந்தியினிடம் கேட்ட கேள்விக்கு திமிராக பதிலளித்த மைனாவின் மீது ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் வைல்ட் காடு என்ரியாயாக மைனா நந்தினி அறிமுகமானார். பிறகு 21 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ஏராளமான சண்டை சச்சரவுகள் இருந்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது ஏழு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளார்கள் அந்த வகையில் ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர்கள் வெளியேறி உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையோடு 50 நாள் முடிவடைகிறது எனவே போட்டியாளர்களை பல ரசிகர்கள் கேள்வி கேட்டனர் அந்த வகையில் தனலட்சுமி மற்றும் அசிமை போட்டியாளர்கள் பாராட்டுமாறு கூறினர். அதன் பிறகு கதிரவனை நீங்கள் எதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தீர்கள் என்று கேட்ட ரசிகை ஒருவர் ஒருவேளை நீங்கள் அனுபவத்திற்காக வந்திருந்தால் உங்களைப் பார்க்கும் எங்கள் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்கள் என்று கலாய்க்கும் படி கூறினார்.

இதனை எடுத்து பேசிய மற்றொரு ரசிகை ரட்சிதா மற்றும் மைனா நந்தினியை பார்த்து உங்களுடைய சம்பளம் கொடுக்கும் சுற்றுலா எப்படி போகிறது என்று கேலி செய்தார் அதற்கு பதில் அளித்த ரட்ச்சிதா மற்றும் மைனா எங்களால் முடிந்த அளவிற்கு வரும் நாட்களில் சிறப்பாக விளையாடுவதாக கூறினார்கள்.

பின்னர் நான் என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன் உங்களால் முடிந்தால் எனக்கு போன் செய்து வாக்களியுங்கள் இல்லை என்றால் என்னை ஒழியுங்கள் என நக்கலாக பதில் அளித்துள்ளார். இவ்வாறு ரசிகையின் கேள்விக்கு எதார்த்தமாக பதில் அளித்த மைனாவின் பதில் பார்வையாளர்களை கடுப்பேற்றி உள்ளது.