Actress Mahima Nambiyaar answer to her fans: சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மகிமா நம்பியார் இவர் 2019 ஆண்டு காரியஸ்தன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் விளம்பர படங்களில் நடித்து மேலும் பிரபலம் அடைந்தார். அவர் தமிழில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த ஆடை என்ற திரைப்படத்தில் மாணவியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தவர்.
இதனையடுத்து அவர் என்னமோ நடக்குது, மோசகுட்டியே, குற்றம்23, கொடிவீரன் இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே போன்ற பல படங்களில் நடித்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு வருகிறார் மகிமா நம்பியார்.தமிழ் சினிமாவை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகையாக உருமாறி வருகிறார்.
மகிமா நம்பியார் கடைசியாக விக்ரம் பிரபுவுடன் அசுரகுரு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் மகிமா. அவ்வபொழுது தனது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது தனது ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது பல கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் வயது என்னவென்று உங்களால் கூற முடியுமா எனக் கேட்டதற்கு அதற்கு பதிலளித்த மகிமா ஆண்கள் கிட்ட அவங்க வருமானத்தைப் பற்றியும் பெண்கள் கிட்டா அவங்க வயசை பற்றியும் கேட்கக்கூடாது என்று உங்களுக்கு தெரியாதா.? என நறுக்குன்னு பதிலைக் கூறினார். மேலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முகம் சுளிக்காமல் பதில் அளித்தார்.