பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மகேஸ்வரி – 5 வாரத்தில் இவருக்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

bigboss
bigboss

தமிழில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி வருடம் தோறும் சிறப்பாக ஒளிபரப்பாகி நிறைவு பெற்று வருகிறது அப்படி இந்தாண்டு பிக் பாஸ் ஆறாவது சீசன் கடந்த மாதம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று வருகிறது இதனை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன் நடைபெற்ற 5 பிக் பாஸ் சீசன் களையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஷாந்தி, மகேஸ்வரி, மைனா நந்தினி, அசீம், ரக்ஷிதா, ஜனனி, ஆயிஷா, அமுத வாணன், கதிரவன், விக்ரமன், ஏடிகே, ராபர்ட் மாஸ்டர், ஷெரினா, ஜி பி முத்து, தனலட்சுமி, மணிகண்டன் போன்ற 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஷாந்தி, அசல் கோளாறு ஷெரினா, ஜி பி முத்து போன்ற நான்கு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் அசிம், கதிர், ஆயிஷா, மகேஸ்வரி போன்ற சிலர் இருந்தனர்.

இதில் மக்களின் வாக்குகளின் படி கதிர் மற்றும் மகேஸ்வரி இருவரும் கடைசி இடத்தில் இருக்கின்றனர் அதில் இந்த வாரம் மகேஸ்வரி தான் குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இவர் இந்த பிக் பாஸ் வீட்டில் ஒரு ஸ்டாங் கண்டஸ்டண்ட் என்றாலும் சில வாரங்களிலேயே இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறார் என்பது சற்று வருத்தம் அடையவும் செய்துள்ளது.

இதனிடையே பிக் பாஸ் வீட்டில் 35 நாட்கள் இருந்த மகேஸ்வரி எவ்வளவு சம்பளம் வாங்கி வெளியேறி உள்ளார் என்ற தகவலும் இணைய தள பக்கத்தில் வெளிவந்துள்ளது. அதன்படி மகேஸ்வரி ஒரு நாளைக்கு 23 ஆயிரம் சம்பளம் என அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த மொத்த 35 நாட்களுக்கும் சேர்த்து 8 லட்சத்துடன் வெளியேறினார் என கூறப்படுகிறது.